1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Indian team announced for Bangladesh series

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடங்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பவுள்ளார். மேலும ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் போன்ற வீரர்கள் முதல் முறையாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.

இந்திய அணி
ரோஹித் ஷர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மொகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜாஸ்ப்ரீத் பும்ரா, யாஷ் தயாள்.
About Writer
vinoth