ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (17:17 IST)

இந்தியாவில் முதல் குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு: சுகாதார அமைச்சகம் தகவல்..!

ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோய் இந்தியாவிலும் பரவி விட்டதாகவும் முதல் குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரங்கம்மை என்னும் நோய் ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியுள்ளது என்பதும் இது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலத்தில் உள்ள விமான பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கம்மை பாதிப்பு உள்ள நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Edited by Siva