திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (20:25 IST)

2022 ஆம் ஆண்டு சிறந்த டி-20 வீரருக்கான விருது வென்ற இந்திய வீரர்!

suryakumar yadav
2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரராக சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் திறமையான பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 31 டி-20  ஓவர் போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் அடித்துள்ளார்.

இதில்,1164  ரன்களும், ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில்  1000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

எனவே கடந்த ஆண்டில் சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதன்படி, 31  போட்டிகளில் 1164 ரன்கள் அடித்து, 45.56 சராசரி வைத்துள்ள சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.

அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ரிஸ்வான் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த  இரண்டாவது வீரர் ஆவார்.