தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்
- 5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!
- சொன்ன மாதிரியே வெற்றி பெற்ற இங்கிலாந்து.. ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி..!
- ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?
- பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!
350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 371 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று நான்காம் நாளில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் தேவையாக இருந்தது.
இதையடுத்து நேற்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது. அந்த அணியின் பென் டக்கட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி இரண்டாவது முறையாக அதை இங்கிலாந்திடம் தோற்றுள்ளது. இந்தியா 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து இரண்டே முறைதான் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.