1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli, Rohit progress in ICC cricket ranking list

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் கோலி, ரோஹித் முன்னேற்றம்!

Kohli Rohit
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொடு மாதமும், சர்வதேச கிரிக்கெட் அணிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களின்  ரேட்டிங்கை வைத்து தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு  ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில், இந்தியா- இலங்கை, பாகிஸ்தான் – நியூசிலாந்து, ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், ஐசிசி அமைப்பு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதில், ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் பாபர்  முதலிடத்திலும், கோலி 6 வது இடத்திலும், ரோஹித்சர்மா 8 வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில்,ஆஸ்திரேலிய வீரர்  லபுஸ்சக்னே முதலிடமும்,  ரிஷப் பாண்ட் 7 வது இடமும் , உஸ்மான் கவஜா 8 வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சில் இந்திய வீரர் பும்ரா 3 வது இட்மும், அஷ்வின் 4 வது இடமும், பெற்றுள்ளனர்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், ஜடேஜா, அஷ்வின் முடல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
நியூசிலாந்து - பாகிஸ்தான் ஒருநாள் போட்டி: சதமடித்தவுடன் அவுட் ஆன கான்வே