திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (11:10 IST)

181 ரன்னுக்கு ஆல் அவுட்- ஃபாலோ ஆன் ஆனது வெஸ்ட் இண்டீஸ்

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

ராஜ்கோட்டில் நடிபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 649 ரன்கள் டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பாக கோலி, பிருத்வி ஷா மற்றும் ரவிந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.

இதையடுத்து நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 94 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தினறி வந்தது. இன்று ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணி உணவு இடைவேளைக்கு முன்பே 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஜோடி சேர்ந்த ச்சேஸ்(53) மற்றும் கீமோ பால்(47) மற்றும் ஓரளவு நிலைத்து நின்று போராடி 73 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை இழந்ததால் அந்த அணியால் பெரிய அள்வில் ரன்களை சேர்க்க முடியவில்லை.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 468 ரன்கள் பின்தங்கியுள்ளதால் அந்த அணி பாலோ ஆன் ஆனது. எனவே அவர்களே மீண்டும் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகின்றனர். 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இதே வேகத்தில் போனால் இன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆல் அவுட் ஆகி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று இன்றே போட்டி முடியவும் வாய்ப்புள்ளது.