திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (20:42 IST)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 வது ODI: இஷான் கிஷான், கில் அதிரடி ஆட்டம்

india -wesindies test
மேற்கிந்திய அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியகிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்னில் வெஸ்ட் இண்டீசை சுருட்டி, சூப்பர் வெற்றி பெற்ற இந்திய அணி,   2 வது ஒருநாள் போட்டியில்  விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த  நிலையில் இரு அணிகள் 1 -1 என்ற சம நிலையில் உள்ள நிலையில் இன்று நடக்கும் 3 வது ஒரு நாள் போட்டியில் எந்த அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 20.2 ஓவர்களில்  1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.  தற்போது கில் 55 ரன்னும், கெய்வாட் 1 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர். இஷான் கிஷான் 77 ரன்னுடன் அவுட்டானார். இவரை விக்கெட்டை வெஸ்ட்  இண்டீஸின்  யானிக் காரி கைப்பற்றினார்.