திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2019 (11:51 IST)

சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை!!

சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து தொடர்பான அறிக்கையில் ரஷ்யா முறைகேடு செய்ததாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் கலந்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி ஆகியவற்றில் ரஷ்யாவால் கலந்துகொள்ள முடியாது. மேலும் அப்போட்டிகளில் ரஷ்ய கொடிகளுக்கும், தேசிய கீதத்திற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.