ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (00:01 IST)

சேற்றுப் புண்ணை குணப்படுத்த இதோ மருத்துவம்

சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும்.
 
இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் அதிக நேரம் செருப்பணியாமல் வெறும் காலுடன் நிற்பதாலும் வரக்கூடும்.
 
1. காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
 
2. கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்.
 
3. அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை  பொருட்களை கொண்டு வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.
 
4. பிதுக்கு மருந்து என அறியப்படும் சில வகைக் களிம்புகளை விரல் இடுக்குகளில் உள்ள சவ்வில் தேய்ப்பதாலும், புண்ணில் ஈரத்தன்மை அண்டாமல் பார்த்துக்கொள்வதாலும் இதை குணப்படுத்தலாம். முழுமையாக குணமாக அதிகபட்சமாக ஒரு வாரம் வரை ஆகலாம்.
 
5. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றானது சேற்றுப்புண் எனப்படும் tinea pedis நோயைத் தணிக்க கொத்த மல்லி எண்ணெயைப் பூசுவது உதவும் என்கிறது.
 
6. சேற்றுப் புண் என்பதை எமது பகுதியில் நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும்.
 
7. காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
 
8. கீழாநெல்லி இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் ஐந்து நாட்கள் இரவில் தடவிவர சேற்றுப் புண் ஆறிவிடும்