செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (12:21 IST)

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது.

ஏற்கனவே இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று மாலை தொடங்க உள்ளது.

இதற்காக இரண்டு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆட்டத்தில் ஷிகார் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், கோலி போன்ற வீரர்களால் இந்திய அணி பேட்டிங் ஃபார்மில் நல்ல நிலையில் உள்ளது. மயங்க் அகர்வால் வருகையால் அணி மேலும் பலமானதாக ஆகும் என கூறப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது பெரும் வலிமையான போட்டியாகவே இருக்கும் என கூறப்படுகிறது. பகல் – இரவு ஆட்டமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து சென்னையில் நடைபெறும் மற்றும் முதல் பகல் – இரவு ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.