புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (08:58 IST)

சென்னை ஸ்டேடியத்தில் புகையிலை விளம்பரங்கள் – பசுமைத் தாயகம் அமைப்புக் கண்டனம் !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள புகையிலை சம்மந்தப்பட்ட விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்  எனக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மைதானத்தில் புகையிலைப் பொருட்கள் விளம்பரங்களை மேற்கொள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து, அதற்காக பான் பஹார் ஆகியவற்றின் விளம்பர பேனர்களை வைத்துள்ளது.

இவற்றை அகற்றவேண்டும் என பசுமை தாயகம் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது சம்மந்தமாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசுக்கு தரவேண்டிய 2500 கோடி ரூபாய் வாடகை பாக்கியை தராமல் தமிழக கிரிக்கெட் வாரியம் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் இப்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.