வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:27 IST)

இன்று நான்காவது டி 20 போட்டி… வெற்றியை தொடருமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதலில் நடந்த இரு டி 20 போட்டிகளிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிடம் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் நடந்த மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி மீண்டெழுந்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நான்காவது டி 20 போட்டி லாடர்ஹில் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழலில் களமிறங்குகிறது.