1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:00 IST)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேருக்கு கொரொனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை

corono
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதன் தாக்கம் முடிந்து இயல்பு  நிலைக்கு உலகம் திரும்பியது என நினைக்கும்போது, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில்  பிஎஃப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.

இதனால் அங்குள்ள்ள மக்கள் தொகையில், 40% க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஎஃப்-7 ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா வரும் வெளி நநாட்டு பயணிகளுக்கு கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 288 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், நாட்டில் கொரொனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.

இத்தொற்றால் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். தற்போது  நாடு முழுவதும் கொரொனாவுக்கு 2,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.