ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (09:58 IST)

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணியும் 230 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க போட்டி டிராவில் முடிந்தது.

இதையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையில் இரண்டாவது ஒருநாள் போட்டி அதே கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு தொடரை வெல்ல வாய்ப்பு அதிகமாகும். அதனால் இந்த போட்டியை வெல்ல இந்திய அணி முழு முயற்சியையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.