செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2024 (10:27 IST)

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள்… பென் டக்கெட் 150 – முன்றாம் நாள் ஆட்ட அப்டேட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில்  2 விக்கெட்களை இழந்து 225 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரின் விக்கெட்களை இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து வீழ்த்தினர். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கும் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 150 ரன்களை சேர்த்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் சேர்த்துள்ளது.