1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2024 (08:12 IST)

பூம்ரா பேட்டிங்கை பார்த்து கத்துக்கோ… ஷுப்மன் கில்லை ஜாலியாக கலாய்த்த ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்தனர்.

இந்திய அணியில் பினவரிசையில் வந்த அஸ்வின், பும்ரா ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பும்ரா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரோடு 26 ரன்கள் சேர்த்தார். அப்போது பெவிலியனில் இருந்த ரோஹித் ஷர்மா ஷுப்மன் கில்லிடம் பும்ராவின் இன்னிங்ஸை பாராட்டி பேசினார்.

அந்த புகைப்படத்தைப் பகிரும் ரசிகர்கள் “எப்படி விளையாடணும்னு பும்ராவ பாத்து கத்துக்கோ’ என அவர் கூறுவதாக மாற்றிப் போட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.கில்  இந்த இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தகக்து.