ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (13:49 IST)

டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு! – ரன்களை கட்டுப்படுத்துமா இந்தியா?

IND vs BAN
இன்று நடைபெறும் இந்தியா – வங்கதேசம் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 17 ஆவது போட்டியாக இன்று வங்கதேசம் இந்தியா அணிகள் மோதிக்கொள்கின்றனர். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேச அணி மூன்றில் இரண்டு ஆட்டங்களில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வென்று தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தனது நாலாவது வெற்றியை பெருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ப்ளேயிங் 11 எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடருகிறது. இந்த போட்டியிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை.

இந்திய அணி வீரர்கள்: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்,

வங்கதேச வீரர்கள்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹுசைன், மெஹிதி ஹசன், டோவிட் ஹ்ருதாய், முஸ்பிகுர் ரஹிம், மகமதுல்லா, நசும் அகமது, ஹாசன் மொஹம்மத், ஷொரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்,

Edit by Prasanth.K