செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (17:03 IST)

இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்யணத்துக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது.
 
இதற்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிச்ம்பர் 6ம் தேதி தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் ஜனவரி 12ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.