செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (10:16 IST)

தமிழ்நாட்டை விட்டு தெலுங்கு மாநிலத்திற்கு சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா

தமிழ் திரையுலகில் நடிகர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு வரைமுறைப்படுத்தவில்லை என்றால் இனிமேல் தெலுங்கு திரைப்படங்கள் தயாரிக்க தெலுங்கு மாநிலத்திற்கு சென்றுவிடுவேன் என்று பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
 
அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த சந்திப்பில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞான்வேல்ராஜா பேசியதாவது:
 
‘தெலுங்கு திரைப்பட உலகம் தான் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றால், அங்குள்ள நடிகர்கள் சம்பளம் 10 அல்லது 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தையும் பிரம்மாண்டமாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்குள்ள நடிகர்கள் 100 கோடி பட்ஜெட் என்றால், படத்தின் நாயகனே 50 கோடி சம்பளம் கேட்கிறார். மீதியிருக்கும் பணத்தில் எப்படி படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடியும்.
 
அதுமட்டுமில்லாமல், தெலுங்கு நடிகர்கள் முன்பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால், இங்கு முன்பணமாக 10 கோடி கேட்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. 
 
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து சம்பளத்தை வரைமுறை படுத்த வேண்டும். இதை நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், தெலுங்கு படங்களை தயாரிக்க அங்கு சென்றுவிடுவேன். ஏற்கனவே அங்கு அலுவலகம் வாங்கி விட்டேன். ஏனென்றால் நஷ்டத்தில் படம் தயாரிப்பதைவிட லாபத்தில் படம் தயாரிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்
 
இவ்வாறு ஞானவேல்ராஜா பேசினார்.