செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:20 IST)

இந்தியா-சீனாவுக்கு வர்த்தக தூதராகிறார் ஆமீர்கான்?

பாலிவுட்டில் நடிகர் அமீர்கானை மத்திய அரசு இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே வர்த்தக தூதராக நியமிக்க திட்டமிட்டுள்ளது.
 
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர் அமீர்கான். தனது திரைப்படங்கள் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துகளை சொல்லி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கல் திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் சீனாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 
குத்துச்சண்டை விளையாட்டின் உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் சீனாவில் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்தது.
 
இந்த நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, நடிகர் அமீர்கானை இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே வர்த்தக தூதராக நியமிப்பதாக தெரிவிக்கவுள்ளார். இதற்கு சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூயூஆ சுன்யிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.