வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:56 IST)

7 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா… வெற்றியை நோக்கி பங்களாதேஷ்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தற்போது முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது.

22 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்த பங்களாதேஷ் அணி 227 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதையடுத்து பேட் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் மற்றும் ரிஷப் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் 314 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 145 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை 7 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி வெற்றிக்கு 64 ரன்கள் தேவை. பங்களாதேஷ் அணி வெற்றிக்கு 3 விக்கெட்கள் தேவை.