1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India struggling after 4 wickets

4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா… ரிஷப்& ஸ்ரேயாஸ் நிதானம்!

இந்தியா
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இப்போது நடந்து வருகிறது.

நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்த பங்களாதேஷ் அணி 227 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். வங்கதேச பேட்ஸ்மேன் மோமினல் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் நான்கு பேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இப்போது ரிஷப் பண்டும் ஸ்ரேயாஸ் ஐயரும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம்: சொன்னது யார் தெரியுமா?