1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:35 IST)

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகளை மணக்கும் ஷாகீன் அப்ரிடி!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தற்போது அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு எடுத்து வருகிறார். நவம்பர் மாதம் 2022 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து ஷாஹீன் மீண்டு வருகிறார். அவர் எப்போது தேசிய அணிக்கு திரும்புவார் என்பது குறித்து  தெளிவான தகவல் எதுவும் இல்லை.

இந்நிலையில் ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகளை மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாஹீன் ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் அழகிய மகள் அக்சாவை காதலித்து வருகிறார். அவர் ஏற்கனவே அக்சாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதன் மூலம் ஷாஹித் அப்ரிடி விரைவில் ஷாஹீனுக்கு மாமனாராக உள்ளார்.