செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (09:09 IST)

ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமாருக்கு பிசிசிஐ கொடுக்கும் ப்ரமோஷன்!

2023 -2024 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவரத்தை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த முறை ஒப்பந்தத்தில் பல அதிரடியான மாற்றங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து கழட்டிவிடப்படலாம் என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் இப்போது சி பிரிவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வரும் நிலையில் அவர்களை ஏ பிரிவுக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் இருவரும் 5 மடங்கு கூடுதல் சம்பளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.