புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (13:10 IST)

இலங்கை –இந்தியா தொடரில் பங்கேற்க முடியாது – பிசிசிஐ உறுதி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த தொடரில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் நடக்க இருந்த அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியும் இந்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட இருந்தது. அந்த போட்டிகளில் விளையாட இலங்கை அணி சம்மதமும் தெரிவித்துள்ளது. ஆனால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதாக பிசிசிஐ, இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளது. அதனால் அந்த தொடர் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.