1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:03 IST)

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

jaiswal
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் முதல் இன்னிங்ஸில் மிக குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்தன. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சுதாரித்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஸ்வால் தற்போது 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல். ராகுல் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராகுலின் அவுட்டுக்குப் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து படிக்கல் பேட்டிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவை விட 321 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இன்று முழுவதும் பேட்டிங் செய்து 500 ரன்கள் இலக்காக நிர்ணயித்து டிக்ளேர் செய்தால், வெற்றி பெற வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Edited by Siva