புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (07:20 IST)

போட்றா வெடிய… எல்லா பார்மட்டிலும் நம்பர் 1 அணியான இந்தியா!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை ஐசிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்திய அணி ஏற்கனவே டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் நம்பர் 1 அணியாக முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி நம்பர் 1 அணியாகியுள்ளது.

 விரைவில் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ள நிலையில் நம்பர் 1 அணியாக உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணி செல்வது பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.