திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (18:11 IST)

மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் இன்று போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
 
ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.