ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் - என்ன செல்கிறார் ராம்கோபால் வர்மா?

Last Updated: புதன், 7 பிப்ரவரி 2018 (22:17 IST)
நடிகர் ரஜினிகாந்த் பிரதமரானால், இந்தியா அமெரிக்காவாகும் என சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் இயக்குனர் ராம்கோபல் வர்மா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் திரைபடங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா, இவர் சமீபகாலமாக டுவிட்டரில் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
 
இவர் சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ரஜினிகாந்த் பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாக மாறும் என தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா 2.0 லிருந்து 200.0 என மாறும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். அவர் உண்மையிலேயே அப்படி கூறினாரா இல்லை ரஜினியை அவர் கிண்டலடித்தாரா என்பது தெரியவில்லை.
 
ஆனாலும், அவரின் கருத்திற்கு சில ரஜினி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :