தொடர்புடைய செய்திகள்
- டிராவிஸ் ஹெட் இன்றும் அதிரடியாக ஆடுவார்… ஆஸி. கேப்டன் நம்பிக்கை!
- இது ஒன்றும் எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது… சர்ச்சைக்கு ரோஹித் ஷர்மா பதில்!
- இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!
- முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!
ஆஸ்திரேலியாவை வெல்ல இதைதான் செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் சொல்லும் அறிவுரை!
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்கின்றது.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை ஆஸி அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத்தால் அந்த அணியும் கொஞ்சம் வலுவிழந்து உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெல்ல சில அறிவுரைகளை வழங்கியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
அதில் “ இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றால் கண்டிப்பாக இரண்டாவது பேட்டிங் எடுத்துதான் சேஸ் செய்யவேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆக்ரோஷமாக உள்ளது. அந்த அணியில் முக்கியமான பவுலர்கள் யாரும் இல்லை. ஆனால் பேட்டிங் வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்