வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (15:36 IST)

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா – சுற்று தொடர் ஆட்டம்

ஏ பிரிவு அணிகளுக்கு இடையிலான சுற்று தொடர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் ஏ பிரிவு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஏ பிரிவுக்கான 5 கட்ட சுற்று தொடர் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக களம் இறங்கிய இந்தியா 33 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரூத்ராஜ் கெய்க்வாட் 99 ரன்கள் அடித்தார். சுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலா ஒரு அரைசதம் வீழ்த்தினர்.

5 கட்ட ஆட்டத்தில் 4 முறை இந்தியாவும், 1 முறை வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.