நாளை முதல் பயிற்சியைத் தொடங்கவுள்ள ஹர்திக் பாண்டியா… எப்போ கம்பேக்?
சில தினங்களுக்கு முன்னர் நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார்.
இந்நிலையில் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அவர் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட மாட்டார் என்றும் நவம்பர் 5 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவோடு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் அவர் கம்பேக் கொடுப்பார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, நாளை முதல் அங்கு பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.