செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2025 (09:29 IST)

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸி மண்ணில் சிறப்பாக விளையாடக் கூடியவரான கோலி ஒரே ஒரு சதத்தை தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பினார்.

கோலியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரே மாதிரியாக தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான் அவர் அதிகமுறை  கேட்ச் கொடுத்து அவுட் ஆகி  வெளியேறுகிறார். ஆனால் அந்த பந்துகளை அடிக்காமல் விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் முன்னாள் வீரர்கள். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.

இந்நிலையில் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோலியின் செயல்திறன் எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணிக் கேப்டன் கங்குலி “கோலி, இதுவரை கிரிக்கெட் உலகம் காணாத மிக அரிதான ஒருநாள் மற்றும் டி 20 வீரர். அவரின் ஃபார்ம் பற்றியெல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை” எனப் பேசியுள்ளார்.