என் காலத்தில் பும்ரா இல்லை என்பது மகிழ்ச்சியாக உள்ளது… இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அந்த தொடரில் மட்டும் அவர் 32 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் தற்காலக் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக உருவாகியுள்ளார்.
பும்ரா பற்றி பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக்கேல் ஆர்தர்டன் “என் காலத்தில் பும்ரா இல்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் அவரின் பவுலிங்கை எதிர்கொள்வது என்பது ஒரு துர்கனவு” எனக் கூறியுள்ளார்.