1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. ICC fined to indian cricket team

இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி.. என்ன காரணம்?

india bat
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்திய அணியின் ஊதியத்தில் 60% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. மேலும் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; தமிழ்நாடு அணி அபார வெற்றி