வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:55 IST)

சிறுநீர் கழித்த விவகாரம்.. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!

air india passenger
ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு டிஜிபிஏ ரூபாய் 30 லட்சம் அபராத விதித்து உத்தரவிட்டு உள்ளது
 
அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது பெண்ணின் மீது போதை பயணி ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போதை பயணி சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இது குறித்து  விசாரணை செய்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் லைசென்ஸை மூன்று மாதத்திற்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran