தொடர்புடைய செய்திகள்
- சிக்ஸர் - பௌண்டரி மழை; மேட்ச் வின்னரான வாட்சன் - 5 சுவாரஸ்ய தகவல்கள்
- டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு; முதலில் களமிறங்கும் ஹைதராபாத்
- பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டி: ஐதராபாத் பேட்டிங்
- கவுண்டி கிரிக்கெட்டில் கோஹ்லி பங்கேற்கும் வாய்ப்பு குறைவு; பிசிசிஐ
- கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் டிவில்லியர்ஸ்
டாஸ் போடும் முறை தொடரும்: ஐசிசி முடிவு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும் முறை தொடரும் என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டு வருவது வழக்கமானது.
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனை செய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை தொடரும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், போட்டியின் போது வீரர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
அடுத்த கட்டுரையில்