வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:20 IST)

தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது முட்டாள்தனம்… இயான் சேப்பல் கடும் விமர்சனம்!

இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை எடுக்காமல் தினேஷ் கார்த்திக்கை விளையாட வைத்தது முட்டாள்தனம் என இயான் சேப்பல் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமளித்த வீரராக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.  இந்த தொடரில் அவர் இதுவரை அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. ஃபீல்டிங்கின் போதும் காயம் அடைந்து வெளியேறினார். அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மிகவும் இக்கட்டான நிலைமையில் இறங்கிய அவர் ரன்களை சேர்க்காமல் அவுட் ஆகி வெளியேறியது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை ரிஷப் பண்ட் இருக்கும் போது தேர்வு செய்தது முட்டாள்தனமான முடிவு என இயான் சேப்பல் கூறியுள்ளார். மேலும் அவர் “ரிஷப் பண்ட் ஒரு நிகழ்கால சூப்பர் ஸ்டார். அவர் தன்னை நிரூபித்துளார். பவுலர்கள் அஞ்சும் ஒரு இடதுகை ஆட்டக்காரர். கில்கிறிஸ்ட் மற்றும் ஜெயசூர்யா போன்ற அதிரடியான ஆட்டக்காரர். அவரை உட்காரவைத்து தினேஷ் கார்த்திக்கை எடுத்தது முட்டாள்தனமான முடிவு” எனக் கூறியுள்ளார்.