1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Will dinesh karthik play in Bangladesh match dravid answer

தினேஷ் கார்த்திக் அடுத்த போட்டியில் விளையாடுவாரா?... டிராவிட் அளித்த விளக்கம்!

தினேஷ் கார்த்திக்
வங்கதேசத்துக்கு எதிரான டி 20 போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமளித்த வீரராக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.  இந்த தொடரில் அவர் இதுவரை அவர் விளையாடிய 2 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு போட்டியில் அவர் பீல்டிங் செய்த போது பாதியிலேயே முதுகுவலி காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

இந்நிலையில் அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் டிராவிட் பதிலளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “தினேஷ் கார்த்திக் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது போட்டிக்கு முன்புதான் முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்தியா எங்ககிட்ட தோத்துச்சுனா கஷ்டமா இருக்கும்! – வங்கதேச கேப்டன் ஷகிப்!