ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:57 IST)

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்த ஹென்ரி கிளாசன்!

ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

இதையடுத்து நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் ஹென்ரிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகைக்கு தக்கவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.