1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (15:13 IST)

அணிதான் முக்கியம்… தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சம்மதித்த ஷுப்மன் கில்!

இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

இந்நிலையில் வீரர்கள் தங்களை நல்ல தொகைக்கு விற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருக்கின்றன. அதற்கு தற்போது தாங்கள் இருக்கும் அணிகள் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வேறு அணிகளுக்குத் தாவவும் தயாராக உள்ளனர். அந்த வகையில் ரஷீத் கான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸுக்கு தாவ உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் குஜராத் அணிக்காக தொடர்ந்து விளையாட 20 கோடி ரூபாய் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அணி நிர்வாகம் ஒத்துக் கொள்ளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது ஷுப்மன் கில் குஜராத் அணிக்காக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து அணியை பலப்படுத்த ஒத்துக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.