1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dhoni talked about fans mentality about IPL

ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஐபிஎல் உரிமையாளர்கள் என்றே நினைத்துக் கொள்கிறார்கள்… தோனி கருத்து!

தோனி
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்கேப்ட் ப்ளேயர் விதியால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்தான் தான் தூதுவராக இருக்கும் சாப்ட்வேர் ஒன்றின் அறிமுக நிகழ்வில் தோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “43 வயதாகும் என்னால் இன்னும் ஐபிஎல் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என தோன்றுகிறது. கடந்த 9 மாதங்களாக நான் ஃபிட்டாக இருந்து வருகிறேன். அதனால் இரண்டரை மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது எனக்குக் கடினமானது இல்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு வீரரும் எந்தந்த அணிக்காக விளையாட வேண்டுமென ரசிகர்கள் கருத்து சொல்லி வருவது குறித்து பேசும்போது “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் தங்களை ஐபிஎல் அணி உரிமையாளராகவே நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு வீரரும் எந்த அணிக்காக ஆடவேண்டும் என்றெல்லாம் அவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்” என கூறியுள்ளார்.

 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்க உள்ள நான்கு வீரர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!