செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (17:49 IST)

ஸ்மித்திற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் கிளாசன்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஸ்மித்திற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் ஹெய்ன்ரிச் கிளாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி  இரண்டு ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
 
அண்மையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை விதித்தது. இதனால் டேவிட் வார்னருக்கு பதிலாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித்திற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் நியமிக்கப்பட்டதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.