புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (15:49 IST)

தொழில்நுட்ப வளர்ச்சிதான் இந்த சர்ச்சைக்கு காரணம் - அஸ்வின்

தொழில்நுட்பத்தில் வளர்ச்சி இல்லாமல் இருந்திருந்தால் நாம் இப்போது இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டோம் என ஸ்மித் விவகாரத்தில் அஸ்வின் தனது கருத்தை கூறியுள்ளார்.

 
ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை எதோ ஒரு பொருளை வைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் ஸ்மித், வார்னர் மற்றும் பேன் கார்ப்ட் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐசிசி போட்டிகளில் விளையாட தடை விதித்து அபராதம் விதித்துள்ளது.
 
இந்த விவகராம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொழில்நுட்பம் மீது குறை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாமல் இருந்திந்தால் நாம் இப்போது இதை பற்றி பேசிக் கொண்டிருக்க மாட்டோம். ஆடுகளம் மற்றும் ஓய்வறையில் என்ன நடந்திருக்கும் என்பது வெகு தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியாது. இந்த செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.
 
வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் நம்மை இந்த தொழில்நுட்பம்தான் வழிநடத்துகிறது என்று கூறலாம். பொதுமக்கள் பார்வைக்கு செல்லும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.