Asia Cup 2023: இந்திய அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில், இந்திய அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடந்து வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், ஹசன் 13 ரன்னும், ஷபிக் 80 ரன்னும், ஹிரிடோய் 54 ரன்னும், அஹமது 44 ரன்னும் அடித்தனர்.
எனவே 50 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில், சமி 2 விக்கெட்டும், தாகூர் 3 விக்கெட்டும், கிரிஷ்ணா,படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்ட் வீழ்த்தினர்.