முகமத் ஷமி மீது அவரது மனைவி நீதிமன்றத்தில் புகார்!

S
Last Modified செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (17:05 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
 
கடந்த மாதம் ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
 
இது தொடர்பாக அவர் போலீஸுக்கு புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் நேரில் சென்று முறையிட்டார். அந்நிலையில், ஷமி டேராடூனில் இருந்து டெல்லிக்கு பயணம் சென்றுள்ளார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது மனைவி ஷமி விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 
தற்போது முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்நிலையில், இன்று ஷமி மற்றும் அவர்களின் குடுமபத்தினர் மீது அவரது மனைவி ஹஸின் ஜஹான் கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :