1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (11:16 IST)

ஷமி குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- ஹசின் ஜஹான்

ஷமி குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- ஹசின் ஜஹான்
கார் விபத்தில் காயமடைந்த ஷமியின் உடல்நலம் விரைவில் குணமடைய இனறவனை வேண்டுகிறேன் என அவரது மனைவி ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.
 
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள் என கொல்கத்தா காவல்துறைக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஷமி குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- ஹசின் ஜஹான்
 
அந்நிலையில், அவர் டேராடூனில் இருந்து டெல்லிக்கு பயணம் சென்றுள்ளார். அப்போது ஷமியின் கார் விபத்துக்குள்ளாகி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
 
இந்த விபத்திலிருந்து ஷமி குணமடைய அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறியிருப்பதாவது,
 
” ஷமி ஒன்றும் எனக்கு பரம எதிரி அல்ல. அவர் எனது கனவர். அவர் உடல்நலக்குறைவோடு இருந்தால், என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.