1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (10:50 IST)

ரோஹித் இல்லெயென்றால் ஆதரவு ஆஸ்திரேலியாவுக்குத்தான் – சர்ச்சை டிவிட்டால் கடுப்பான வீரர்.

இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பெயரில் போலியாக வெளியான ட்விட்டால் அவர் கோபமடைந்து கடுமையாக எதிவினையாற்றியுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா பூதாகாரமான ஆட்டத்திறனோடு ஒருநாள் போட்டிகளில் கலக்கி வருகிறார். இதனால் அவரை ரசிகர்கள் ஹிட்மேன் எனப் புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கான இடம் இன்னும் நிரந்தரமாகக் கிடைக்கவில்லை. அதனால் கடந்த ஓராண்டாக டெஸ்ட் அனியில் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். ஆனால் தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெருவாரா என்பது இப்போது வரை உறுதியாகத் தெரியவில்லை. டெஸ்ட் அணியில் ரோஹித் இடம்பெறாததற்கு கேப்டன் கோஹ்லிதான் காரணம் என்ற சர்ச்சையும் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது.

இந்த பிரச்சனைகளை ஒட்டி தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ’ரோஹித் இல்லையென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஆஸ்திரேலியாவை நான் ஆதரிப்பேன்’ என ஹர்பஜன் சிங் சொல்லியிருப்பது போல ஒரு ட்விட் வைரலாகப் பரவி வந்தது. அனைவரும் அந்த செய்தியை உண்மை என நம்பி ஹர்பஜனை திட்ட ஆரம்பித்தனர்.

இந்த விஷயம அறிந்த ஹர்பஜன் உடனே தனது டிவிட்டர் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘என்னைப் பற்றியும், நான் கூறியதாக வரும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளும் உண்மையற்றவை. யார் இப்படி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.  இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை எப்படிப் பதிவிடுகிறார்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். அனைவரும் இந்தியாவைச் சேர்ந்து ஆதரிப்போம்’ எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.