விராத் கோஹ்லி அபாரம்: இந்தியா த்ரில் வெற்றி

Last Modified ஞாயிறு, 25 நவம்பர் 2018 (16:56 IST)
இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் சமன் ஆனது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் விராத் கோஹ்லி அதிரடியாக 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தவான் 41 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் 3வது மற்றும் 4வது பந்துகளில் பவுண்டரிகளை கோஹிலி விளாசியதால் இந்திய அணி
வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2வது டி-20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :