1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Harbhajan singh talked about Indian world cup squad weakness

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

உலகக் கோப்பை
அடுத்த மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான். அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சிறப்பாக உள்ளது. ஆனால் நான்கு சுழல்பந்து வீச்சாளர்களுக்குப் பதில் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தேவை. மூன்று ஸ்பின்னர்களே போதுமானது. அதே போல அணியில் ரிங்கு சிங் இடம்பெற்றிருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி
ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜாஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்
அடுத்த கட்டுரையில்
இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!